Monday, 17 September 2018

யோகப் பயிற்சிகள் செய்ய வேண்டுமென்றால், உடலளவிலும், வெளிநிலையும் சில விதிமுறைகள் நாம் கடைபிடிக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

அந்த விதிமுறைகள் என்னென்ன என்பதை கீழே தொளிவுபடுத்தப்பட்டுள்ளது.

காலி வயிறு நிலை:
யோகாசனங்கள் செய்யும்போது, நீங்கள் காலிவயிறு நிலையில் இருந்தால் மட்டும் போதாது, உங்கல் குடலும் காலியாக இருக்க வேண்டும். உங்கள் சக்தி மேல்நோக்கி நகர வேண்டுமென்றால், உடல் அல்லாத பொருட்கள் உடலை விட்டு வெளியேற வேண்டும். யோகப் பயிற்சிகள் வெறும் உடற்பயிற்சிகள் அல்ல, உங்கள் உடலை மறு கட்டமைப்பு செய்து, உங்களை எப்படி வேண்டுமோ அப்படி உருவாக்கும் வழிமுறைகள். அப்படிப்பட்ட செயல் நடக்க வேண்டுமென்றால், உடல் அல்லாத வேறு எதுவும் அங்கே இருக்கக் கூடாது.
யோகா என்றால், படைத்தவருடன் ஒரு கூட்டு அமைக்க தொடங்குகிறீர்கள். இதை நீங்களாகவே செய்ய முடியாது, ஆனால் அவரைச் செய்வதற்கு ஒரு சூழ்நிலை நீங்கள் உருவாக்க முடியும். படைப்பின் மூலத்துடன் கூட்டமைப்பதென்பது, பெரும் அறிவாற்றலை உங்களுடன் இணைக்கும் செயல். உங்களால் நம்ப முடியாத அளவிளான அறிவாற்றல் அது. இந்த செயல் நடக்க வேண்டுமென்றால், அங்கே எந்த தடையும் இருக்கக் கூடாது – நீங்கள் உள்ளே அனுப்பிய உணவோ அல்லது நீங்கள் உருவாக்கிய கழிவோ, இவை இரண்டும் வெளியேற்றப்பட வேண்டும்.


குளிர்ந்த நீர்:
பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்பு, அறையின் வெப்பநிலையைவிட 5 லிருந்து 8 டிகிரீ சென்டிகிரேடு குறைந்த அளவில் உள்ள தண்ணீரில் குளிப்பது உகந்தது.
இப்படி செய்வதன் மூலம், தோல் செல்களுக்கு இடையே உள்ள நுண்துளைகள் திறக்கப்படும். யோகப் பயிற்சி செய்வதற்கு இது மிகவும் உகந்தது, ஏனென்றால் உங்கள் செல்களின் கட்டமைப்பு வேறு ஒரு பரிமாணத்தில் சக்தியூட்டப்பட வேண்டும்.
ஏன் ஒருவர் மற்றவரைவிட மிக உயிரோட்டமாக காணப்படுகிறார் என்றால், இதனால்தான். உங்கள் செல்களின் கட்டமைப்பு சக்தியூட்டப்பட்டால், நீண்ட காலத்திற்கு அது இளமையாக இருக்கும்.


கண்கள் மூடி இருத்தல்:
ஒரு மனிதனுக்கு பார்வை அமைப்புதான் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றது. நீங்கள் கண்களை மூடும்போது, உலகம் மறைந்துவிடுகிறது. நம்முள்ளே நடக்கும் நிகழ்வுகளுக்கு, காட்சி அமைப்புகள் இயல்பாகவே மூடிக்கொள்ளும்.
ஏனென்றால், காட்சி அமைப்புகள் வெளியுலகிற்கு மட்டும்தான் நம்மை ஈடுபடுத்தும். அவைகளை மூடிவிட்டாலும் உங்களுக்கு நறுமணம், தொடு உணர்வு, கேட்பது எல்லாமும் நடக்கும், ஆனால் பாதி உலகம் மூடப்பட்டுவிடும். எனவே உள்நோக்குதல் என்பது உங்கள் கண்கள் மூடப்பட்டால்தான் திறம்பட நடக்கும். நீங்கள் ஆசனங்கள் செய்யும்போது அனைத்தையும் உள்முகமாக்க வேண்டும்.


கண்ணாடி பயன்படுத்துதல்/இசை கேட்டல்:
ஹடயோகப் பயிற்சி செய்யும்போது அங்கே கண்ணாடியோ இல்லை இசையோ இருக்கவே கூடாது. கண்ணாடியைப் பயன்படுத்தும் கலாச்சாரம், பாடி பில்டிங் மற்றும் ஜிம்னேஷியத்திலிருந்து வந்தது. ஏனென்றால் தங்கள் உடலை அவர்கள் வியந்து பார்க்க வேண்டும் என்பதற்காக அவைகளை வைத்துக் கொண்டார்கள்.
யோகாவில் இந்த அணுகுமுறை இருக்கக் கூடாது. பல யோகிகளின் உடல் கட்டமைப்பு தடகள வீரர்களைப்போல அல்லாமல் மிகச் சாதாரணமாகத்தான் இருக்கும். நிறைய பேருக்கு பானை வயிறும் கூட இருப்பதைப் பார்க்கமுடியும். ஏனென்றால், அவர்கள் கண்ணாடியைப் பார்ப்பதில்லை, அவர்களுடைய நோக்கமே தாங்கள் வளர வேண்டும் என்பது மட்டும்தான். இந்தப் படைப்பின் மூலத்துடன் நீங்கள் ஈடுபட வேண்டுமென்றால், உங்கள் உடல், மனம், சக்தி, உயிர் எல்லாமே முழுக்க முழுக்க ஈடுபட வேண்டும். இதே கண்ணாடியைப் பார்த்தால், மற்றவர்களைத் தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீகள். ஆசனப் பயிற்சிகள் செய்யும்போது, உங்கள் மனக்குவிப்பு மிகவும் முக்கியம்.


பேச்சு:
ஆசனம் என்பது தியானம் செய்ய ஒரு ஆற்றல்மிக்க வழிமுறை. உங்களால் ஸ்திரமாக உட்கார முடியாததால், தியான நிலையை அடைய வேறு ஒன்றைச் செய்கிறீர்கள். எது சௌகரியமகவும், நிலையாகவும் உள்ளதோ அதுதான் உங்கள் ஆசனம். உங்கள் உடல் மனம் சௌக்கியமாகவும், உங்கள் சக்தி சமநிலையுடனும் அதிர்வுடனும் இருந்து, பிறகு நீங்கள் ஒருவிதமாக உட்கார்ந்தால், இயல்பாகவே நீங்கள் தியான நிலையில் இருப்பீர்கள். அந்த இயற்கையான தியான நிலைக்கு நீங்கள் வர, ஆசனம் என்பது ஒரு தயார்படுத்தும் படிநிலை. எனவே, ஒருவிதத்தில் ஆசனம் என்பது தியானம் செய்ய ஆற்றல் மிக்க வழிமுறை.
ஆசனம் செய்யும்போது நீங்கள் பேசினால், உங்கள் உடலளவில் மட்டுமல்ல, சக்திநிலையிலும் பல மாற்றம் ஏற்படும். எனவே ஆசனம் செய்யும்போது பேசக்கூடாது என்பது ஒரு கட்டாயம் மட்டுமில்லை, அது ஒரு விதிமுறையும் கூட. ஆசன நிலையில் நீங்கள் எப்போதும் பேசவே கூடாது, ஏனென்றால் உங்களின் சக்திநிலையில், கவனத்தில், சுவாசத்தில் நடப்பது எல்லமே மிக மிக முக்கியம், இல்லையென்றால் அது உங்கள் உடலில் தொந்தரவு ஏற்படும். நீங்கள் பேச வேண்டுமென்றால், ஆசனம் செய்யத் தேவையில்லை, ஜாக்கிங் செய்துகொண்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலாம்

சர சூத்திரம்

சரமறிந்தவன் பரம்பார்ப்பான் சரமறிந்தவனிடன் சரசமாடாதே - முதுமொழி


காலையில் தூங்கி எழும்போதே அன்றைய தினம் எப்படி இருக்கும்! எப்படி இருந்தால் தனக்கு நன்மை உண்டாகும் என்று கணிக்க இச்சரசூத்திரத்தினை பின்பற்றுங்கள்


படுக்கையிலிருந்து எழ வேண்டிய நேரம் அதிகாலை 4.00 மணி. 4.00 மணி என்பது மிகவும் முக்கியமான நேரமாகும்.
அதிகாலை 4.00 மணிக்கு எந்த நாசிப்பக்கமாக மூச்சு வெளிவருகிறது என்பதைக் கவனித்தால், அன்றைய பொழுதில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மூக்கிலிருந்து வெளிவருகின்ற மூச்சு முறையாக இல்லாமல் தாறுமாறாக இருக்குமேயானால், மதங்கொண்ட யானையைப் போல் தாறுமாறாக நடந்து இன்பங்களை இழந்து துன்பங்களைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டியிருக்கும்.
ஒவ்வொரு நாளும் நாம் விடுகின்ற மூச்சு, மூக்கின் இரண்டு நாசிகளில் ஒரு பக்க நாசியில் வெளி வர வேண்டும்.
மூக்கில் விடுகின்ற மூச்சுக்காற்று முறையாக வெளிவர முதலில் இடது பக்கத்து நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து வலது பக்க நாசி வழியாக வெளியிட வேண்டும்.
அடுத்து, வலது பக்க நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து இடது பக்கத்து நாசி வழியாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு, காலையிலும் மாலையிலும் 21 முறை செய்து பழக வேண்டும்.
அவ்வாறு செய்தால், மூக்கிலும் மூச்சுக் குழாயிலும் நுரையீரலிலும் உள்ள அடைப்புகளும், சளியும் வெளியேறிவிடும். அதன் பின் மூச்சுவிடுவது இயல்பாக இருக்கும்.

அடுத்ததாக, அதிகாலையில் விழித்தெழுந்து மூக்கில் எந்த நாசி வழியாக மூச்சுக்காற்று வெளியே வருகிறது என்று பார்க்க வேண்டும்.
அதிகாலையில் எந்தப்பக்கத்து நாசி வழியாக மூச்சுக் காற்று வெளிவருகிறது என்பதைக் கொண்டு, அன்றைய தினம் நமது உடம்பு எவ்வாறு இருக்கும் என்பதை முன்னரே அறிந்து கொள்ளலாம்.
வலது நாசி என்பது சூரிய கலை.
இடது நாசி என்பது சந்திர கலை.
ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு அன்றைய பொழுதின் உடல் நலம் தொடங்குகிறது.
அன்றைய பொழுதின் உடல் நடத்தை அதிகாலையிலேயே கண்டறிந்து கொண்டு, அதற்கு வேண்டிய மாற்ற நடவடிக்கைகளைச் செய்து கொண்டால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல, அதிகாலையிலேயே முடிந்துவிடும்.

எப்படியென்றால், வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய இம்மூன்று நாள்களில் அதிகாலை நான்கு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.

ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய இம்மூன்று நாள்களில் வலது பக்க நாசி வாயாக மூச்சு வெளிவர வேண்டும்.

வார நாள்கள் எனில் வியாழக்கிழமை மிகவும் முக்கியமான நாளாகும்.
மற்ற ஆறு நாள்களைப்போல வியாழக்கிழமையில் மூச்சு விட முடியாது.
வியாழக்கிழமை அன்று பௌர்ணமியாக இருந்தால், அதிகாலை நான்கு மணிக்கு இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
வியாழக்கிழமை அன்று அமாவாசையாக இருந்தால் இடது நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
இவை இரண்டும் இல்லாமல் வளர்பிறையாக இருந்தால் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
தேய்பிறையாக இருந்தால் வலது பக்க நாசி வாயாக மூச்சு வெளிவர வேண்டும்.
மேலே கூறியது கூறியவாறு மூச்சு வெளிவந்து கொண்டிருந்தால் அந்த ஏழு நாள்களும் உடல் நலமும் மன நலமும் சீறாக இருக்கும்.

எவ்விதமான நோய்நொடிகளும் அண்டாமல் இருக்கும்.
அதற்கு மாறாக, நடந்தால் என்ன நடக்கும்.

ஞாயிறு அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், தலைவலி, சளி, இருமல், ஈளை, மூச்சடைப்பு நோய்கள் உருவாகும்.

திங்கள் அன்று காலையில் இடது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவந்தால், ஜலதோசம், ஆஸ்துமா, தும்மல் நோய்கள் உண்டாகும்.

செவ்வாய் அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூசு வெளிவந்தால், காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், பித்த மயக்கம் ஆகியவை ஏற்படும்.

புதன் அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், உடல் வலி, கைகால் குடைச்சல், மூட்டுவலி, நீரேற்றம், தலைக்குத்தல் போன்ற நோய்கள் உருவாகும்.

வியாழக்கிழமை நாளில் பௌர்ணமி, அமாவாசை, வளர்பிறை, தேய்பிறை ஆகியவை இருந்தால், முறையே இடது நாசி, வலது நாசி, இடது நாசி, வலது நாசி ஆகிய நாசி வழியாக மூச்சு வெளிவரவேண்டும்.
அதற்கு மாறாக வெளிவந்தால், அடி வயிற்றில் நோயுண்டாகும்.
பெண்களுக்குக் கருப்பைக் கோளாறு ஏற்படும். மலட்டுத் தன்மை உருவாகும்.
இல்லற உறவு கசந்து போகும்.

வெள்ளி அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், கண் வலி வரும். கண் நோய் உண்டாகும். பார்வை குறையும்.

சனி அன்று காலையில் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், குளிர் கரம், சரும நோய், குட்டம் போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு.
மூக்கின் வழியாக வருகின்ற மூச்சுக்காற்று தடம் மாறி நடந்தால் உடல்நலம் மட்டுந்தான் பாதிக்கும் என்றில்லை. மன நலமும் பாதிக்கும்.
மன நலத்தில் ஏற்படுகின்ற பாதிப்பினால், உற்றார் உறவினர்களுடன் பழகும் பழக்கங்களும் பாதிக்கும். அதனால், உறவு முறிவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
வார நாள்களில் விடுகின்ற மூச்சுக்காற்று தடம்மாறினால் உடல் நலத்தில் குறைபாடுகளும் நோய்களும் உருவாகி, அவற்றின் ஆதிக்கத்தினால் உடல் நலம் பாதிக்கும்.
உறவும் தொழிலும் உடன்படாமல் எதிர்மறையாகச் செயல்படும்.
கசப்பும் இழப்பும் வாழக்கையைத் தடம் புரளச் செய்துவிடும்.
இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமானது மூச்சுக்காற்று.
அது, நாள்தோறும் விடியற்காலையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கொண்டு அன்றைய பொழுதின் ஆரோக்கியத்தை, மன வளத்தை அறிந்து கொள்ளலாம்.

மூச்சுக்காற்று எந்த நாசியில் இயங்குகிறது என்பதைக் கண்டறிந்து அன்றைய பொழுது எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்வது மட்டும் உடல் நலத்தைப் பேணுவது ஆகாது. தீங்கும் தீமையும் வரப்போகிறது என்றறிந்து கொண்டு வருவது வரட்டும்!
ஒரு கை பார்த்துக் கொள்ளலாம்! என்றிருப்பது அறிவுடமையுமாகாது. எந்தச் செயலுக்கும் ஒரு மாற்று இருப்பதைப் போல, எல்லாவற்றுக்கும் தீர்வு என்பது இருக்கும் என்பதை உணர்ந்து அந்தத் தீர்வு என்ன என்று அறிய முற்பட வேண்டும்.
மூச்சுக்காற்று அதன் இயல்புக்கு மாறாக நடக்கத்தொடங்கும் போதே அதனை மாற்றுவதற்கான தீர்வைச் செய்து முறையாக இயங்கச் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் தீங்கும் தீமையும் நீர்த்துப் போகும்.
கிழமைக்கு ஏற்றவாறு நாசியின் வலப்புறமோ அல்லது இடப்புறமோ இயங்குகின்ற மூச்சானது, சுமார் ஒரு மணி நேரம் வரை இயங்கிவிட்டு அடுத்த நாசிக்கு மாறிவிடும்.
அதிகாலை நான்கு மணி என்பது அன்றையப் பொழுதின் தொடக்க நேரம் என்று முன்னரே சொன்னோம். அந்த நேரத்தைக்குறிப்பிடவே 'வைகறை துயில் எழு’ என்று கூறப்பட்டுள்ளது.
சூரியகலை சூரியனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது.
இது வெப்பமானது.
சந்திரகலை சந்திரனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது.
இது குளிர்ச்சியானது.
குளிர்ச்சியும் வெப்பமும் உடலுக்குத் தேவை என்பதால் அவை இரண்டும் மாறி மாறி இயங்கி உலைப் பாதுகாக்கின்றன.
வெப்பம் மிகுந்தாலும் நோயாகும். குளிர்ச்சி மிகுந்தாலும் நோயாகும். அவை இரண்டும் சம அளவில் இயங்கிக் கொண்டிருந்தால், அல்லது இயங்கச் செய்து கொண்டிருந்தால் நோய் என்னும் பேச்சுக்கே இடமில்லை.
அதிகாலையில் எழுந்திருந்த காலைக்கடன்களை முடித்து விட்டு, முகத்தைச் சுத்தம் செய்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறிக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர், நாசிக்குக் கீழே கையை வைத்து எந்த நாசியின் வழியாக மூச்சுக்காற்று வந்து போகிறது என்பதைச் சோதிக்க வேண்டும்.
அதன் பிறகு, அன்றைய கிழமை என்ன, அக்கிழமையன்று எந்த நாசியின் வழியாக மூச்சு இயங்க வேண்டும் என்றறிந்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு வலப்புற நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்க வேண்டும்.
அன்றைக்கு அதிகாலையில் வலப்புறத்தில் இயங்கினால் தோஷமில்லை. மாறாக இடப்புறமாக இயங்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.
என்ன செய்ய வேண்டும்?
போர்வை, சமுக்காளம் போன்ற துணியைத் தரையில் விரித்துக் கொண்டு, அதன் மீது பத்ம ஆசனம் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்.
பத்மாசனம் போட முடியாவிட்டால் சுகாசனம் போட்டு அமர்ந்து கொள்ளலாம்.
சுகாசனம் என்பது சாப்பிடும்போது உட்காருவதுபோல் உட்கார்வது.
அவ்வாறு உட்கார்ந்து கொண்டு வலது கையின் கட்டை விரல் மோதிர விரல் ஆகிய இரண்ட மட்டும் நீட்டிக் கொண்டு மற்ற மூன்று விரல்களையும் உட்புறமாக மடக்கிக் கொண்டு, கட்டை விரலை வலப்புற நாசியிலும் மோதிர விரலை இடப்புற நாசியிலும் மூக்கைச் சிந்தும்போது வைப்பது போல் வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது, கட்டை விரலால் வலப்புற நாசியை அமுக்கி மூச்சு வராமல் அடைத்துக் கொண்டு இடப்புறத்து நாசி வழியாக மூச்சை மெதுவாக உள்ளுக்குள் இழுக்க வேண்டும். அவ்வாறு இழுக்கும் நேரம் அரை நிமிடம் என்று வைத்துக் கொள்வோம்.
மூச்சை இழுத்தவுடன் மோதிர விரலால் இடப்புறத்து நாசியை அடைத்துக் கொண்டு, கட்டை விரலை எடுத்து விட்டு, வலப்புற நாசி வழியாகக் காற்றை வெளியே விட வேண்டும்.
மூச்சை வெளியே விடும்போது, இடப்புறமாக மூச்சை இழுக்கும்போது ஆகும் நேரம் அரை நிமிடத்தைப் போல இரண்டு மடங்கு நேரம் (ஒரு நிமிடம்) மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும்.
அடுத்து, வலப்புற நாசி வழியாக மூச்சை வெளியே விட்டதும், அந்த நாசியின் வழியாகவே மூச்சை அரை நிமிட நேரம் அளவுக்கு உள்ளே இழுக்க வேண்டும்.
காற்று உள்ளே சென்ற வலப்புற நாசியைக் கட்டை விரலால் அடைத்துக் கொண்டு, இடப்புறத்தை அடைத்துக் கொண்டிருக்கும் மோதிர விரலைத் தளர்த்திக் கொண்டு ஒரு நிமிட நேரம் அளவுக்கு உள்ளே சென்ற காற்றை மெதுவாக வெளியே விட வேண்டும்.
இவ்வாறு, வலப்புறமும் இடப்புறமும் மாறி மாறி விட வேண்டும். வலது புறத்திலும் இடது புறத்திலும் மூச்சு விடுவது ஒன்று எனக் கணக்கிட்டு, இருபத்தொரு முறை விட வேண்டும்.
அவ்வாறு செய்த பின்பு, சிறிது நேர ஓய்வுக்குப் பின்பு நாசியைச் சோதிக்க வேண்டும்.
அப்போது, இயல்பாக வரவேண்டிய வலது புறத்து நாசி வழியாக மூச்சு வர வேண்டும்- அப்போதும் இடது புறத்து வழியாகவே மூச்சு வந்து கொண்டிருந்தால், கவலைப்படவேண்டாம்.
விரித்து வைத்துள்ள துணியின் மீது, தெற்கில் தலையை வைத்துப் படுத்துக் கொள்ளலாம்.
இடது கையை மடக்கி தலைக்கு வைத்துக் கொள்ளலாம்.
உள்ளங்களையில் காதைவைத்து படுத்துக் கொள்ளவும்.
இடது காலை மடக்கி வலது காலை நீட்டிக் கொள்ளவும். வலது கை வலது தொடையில் இருக்குமாறு நீட்டிக் கொண்டு, பத்துப் பதினைந்து நிமிடங்கள் படுத்திருந்தால், மூச்சு இடது கலையிலிருந்து மாறி வலதுக்கு வந்துவிடும்.
மேலும் மற்றொரு முறை சுவர் ஓரமாக நின்று கொண்டு இடது காலைத் தூக்கி வலது கால் தொடை மீது வைத்துக் கொள்ளவும்.
கை இரண்டையும் ஒன்றாகச்¢சேர்த்து கும்பிடுவதுபோல வைத்துக் கொண்டு, கையைத் தலைக்கு மேலே நீட்டிக் கொள்ளவும்.
இதற்கு நின்ற பாத ஆசனம் என்று பெயர். இந்த ஆசனத்தில் ஐந்து நிமிடம் நின்றால் மூச்சு இடகலையிலிருந்து வலதுக்கு மாறிவிடும்.
இவ்வாறு கலையை மாற்றிக்கொண்டால், அன்றைய பொழுது ஆனந்தமாக இருக்கும்.
கால் மேல் கால்:
ஒரு சிலர் எந்த இடத்தில் அமர்ந்தாலும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
பெரியவர்கள் முன்னிலையில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு அமரக் கூடாது! அது மரியாதைக் குறைவு என்றெல்லாம் கூறப்பட்டாலும், யார் எதைச் சொன்னாலும் நான் அப்படித்தான் உட்காருவேன் என்று, உட்காருவோரும் இருக்கின்றார்கள்.
வலது காலின் பெரு விரலிலிருந்து சூரிய கலையும், இடது காலின் பெருவிரலில் இருந்து சந்திர கலையும் தொடங்குகிறது என்பதால், வலது காலைச் சூரியனாகவும் இடது காலைச் சந்திரனாகவும் கருதலாம்.
உட்காரும் போது வலது கால் இடது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால் சூரிய ஆற்றல் மிகும்.
இடது கால் வலது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால் சந்திர ஆற்றல் மிகும்.
எப்போதும் வலது காலை இடது கால் மீது போட்டுக் கொண்டு அமர்கின்றவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.
இடது காலை வலது கால் மீது போட்டுக் கொண்டு அமர்கின்றவர்கள் சாந்தமானவர்களாக இருப்பார்கள்.
இருக்கையில் அமரும் போது அப்படி அமரலாம்.
தரையில் அமரும் போது என்ன செய்யலாம்?
தரையில் அமரும் போதும் முதலில் இடது காலை மடக்கிக் கொள்ளவும்.
அடுத்து வலது காலைத்தூக்கி இடது கால் மீது போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டால் சூரிய ஆற்றல் கிடைக்கும்.
நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள்.

காடு, மலைகளில் வாழ்ந்த சித்தர்கள் நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்தார்கள். நோய்கள் அவர்கள் அருகே வர அஞ்சியது. தங்கள் ஆயுள் ரகசியத்தை அவர்கள் சொல்லி இருந்தாலும், நாம் தான் அதன்படி வாழ மறுக்கிறோம். 18 சித்தர்களில் ஒருவரான தேரையார் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு பட்டியலே இடுகிறார்.
மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் இப்படி சொல்கிறார் :

1) பால் உணவு உட்கொள்ளுங்கள்.

2) எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளியுங்கள்.
3) படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்து படுங்கள்.
5) புளித்த தயிர் உணவை விருப்பி உட்கொள்ளுங்கள்.
6) பசிக்கும்போது மட்டுமே உணவை உட்கொள்ளுங்கள்.
7) ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.
8) இரவில் நன்றாக தூங்குங்கள்.
9) பெண்ணுடன் மாதம் ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.
10) வாழைக்காயை உணவுக்கு பயன்படுத்தும்போது பிஞ்சிக் காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் . முற்றிய காய்களை கறி சமைத்து உண்ணக்கூடாது.
11) உணவு உட்கொண்ட உடனேயே சிறிது தூரம் நடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும்.
12) 6 மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்ள வேண்டும்.
13) 4 மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிடுங்கள்.
14) 1 1/2 மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டு சளி போன்ற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
15) வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்துகொள்ள வேண்டும். ( இது ஆண்களுக்கு மட்டும் )
16) 4 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
17) 3 நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இட வேண்டும். (பெண்களுக்கு மட்டும்)
18) விரும்பிய தெய்வங்கள், குருவை வணங்குங்கள்.
இவற்றை எல்லாம் ஒருவர் தனது வாழ்நாளில் பின்பற்றி வந்தால் எமன்
அவரை நெருங்கி வரவே பயப்படுவான் என்கிறார் தேரையார்.


எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு தேரையாரின் அறிவுரை :
1) பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்த்து விடுங்கள்.
2) கரும்பு போன்ற இனிப்பவர்களாக இருந்தாலும் வயதில் மூத்த பெண்களுடனும் இனிய வாசம் தரும் தலைமுடியைக் கொண்ட விலைமாதர்களுடன் உடலுறவு கொள்ளாதீர்கள்.
3) காலை இளம் வெயிலில் அலையாதீகள்.
4) மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்கி வைத்திருக்காதீர்கள்.
5) முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்று இருந்தாலும் அதை மறுநாள் உண்ணவேண்டாம்.
6) உலகமே பரிசாக கிடைக்கிறது என்ற போதும், பசிக்காத போது உணவு உட்கொள்ளாதீர்கள்.
உணவு உட்கொள்ளும்போது தாகம் அதிகம் எடுத்தாலும், இடைஇடையே தண்ணீர் குடிக்கக்கூடாது.
மயக்கும் மனம் வீசும் கந்தம், மலர்கள் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகரக்கூடாது .
மாத விலக்கான பெண்கள், ஆடு, கழுதை போன்றவை வரும் பாதையில் எழும் புழுதி உடல்மேல் படும்படி நெருங்கி நடந்து செல்லாதீர்கள்.
இரவில், விளக்கு வெளிச்சத்தில் நிற்பவர் நிழலிலும், மர நிழலிலும் நிற்பதை தவிர்த்திடுங்கள்.
பசியின் போது உணவு உட்கொண்ட உடனேயும் உடலுறவு வைத்துக்கொள்ளாதீர்கள்.
மாலை நேரத்தில் தூங்குதல், உணவு உட்கொள்ளுதல், அளவுக்கு மீறிய காமச் செயல்களில் ஈடுபடுதல், அழுக்கான ஆடை அணிந்திருத்தல், தலையை வாரி முடி உதிரச்செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.
மற்றவர்கள் கை உதறும்போது அவர்களது நகத்திலிருந்து விழும் தண்ணீரும், குளித்து தலை துவட்டும் போது உதிரும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்காதீர்கள்.
-இப்படி சொல்கிறார் அவர்.
தேரையார் சித்தர் கூறிய அனைத்தையும் ஒரே நாளில் பின்பற்றுவது என்பது இயலாத காரியம். ஏனென்றால், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை அப்படி. அதனால், படிப்படியாக முயற்சிப்போம். நோய், நொடியின்றி நாளும் நலத்தோடு வாழ்வோம்.

1) எப்படி தூங்க வேண்டும்?
பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு.
வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது.
இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும்,
தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.
அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது.
கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.
நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.
காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.
எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.
இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பதனால் அனேகம்பேர் அதனை விரும்புவதில்லை.

2) வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?
ஆன்மீகம் - பூதம் தூக்கிப் போய்விடும்(குழந்தைகளுக்காக).
அறிவியல் - புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்.
நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது இது மிக அதிகம்.
இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும் குன்றிவிடும்.
(உ.ம் - சூடான தோசைக் கல்லில் நீர் தெளித்தல்).
இதனால் இரத்தம் மற்றும் வெப்பம் சம்மந்தமான வியாதிகள் வரும்.

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...