Monday, 19 November 2018

ஆரம்ப பயிற்சி

வணக்கம் சிவயநம 🌞🙏🌙
நமது குழுவில் சித்தர்கள் வழங்கிய யோகத்தினை கடைபிடிக்க முயலும் அன்பர்கள் இயமம் நியமம் நியதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் அவ்வாறு கடைபிடித்து யோகம் பயிலுங்கள்

ஆரம்ப பயிற்சியாக

அமைதியான இடத்தில் விரிப்புகளை விரித்து, அந்த விரிப்புகளாக வெண் துகில், கம்பளி, தர்ப்பை போன்ற விரிப்புகளை பயன்படுத்துங்கள்.

உட்காரும் ஆசனங்கள்

பத்மாசனம், வீராசனம், வஜ்ராசனம், சித்தாசனம் இந்த நான்கு ஆசனங்களில் ஏதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்து முதுகு கழுத்து தலை நேராக நிமிர்த்தி உட்காருதல் அவசியமாகும்.

ஆசனத்தில் அமர்ந்த பின்பு உங்களது
தாய் தந்தை குலதெய்வத்தை வணங்கி குருவையும் வணங்கி பயிற்சியினை ஆரம்பிக்கலாம்

குரு வணக்கம்

ஓம் ஆதி குருவே வருக சிவகுருவே வருக
கந்த குருவே வருக
பதினெண் சித்தர்களும் குருவாய் வந்து சிவயோகத்தினை அருளி வழிநடத்த உங்களது
திருத்தாள் பணிந்து உம்மை சரணடைந்து பணிகின்றேன் இவ்யோகத்தினை எந்த இடையூறும் இல்லாமல் காத்து எம்மை சிவயோகியாக்கி அருள வேண்டும்.
என்று வணங்கி

இரு 👁👁 கண்களையும் திறந்து 👃 மூக்கு நுனியை பார்க்க வேண்டும் மூக்கு நுனியில் இரு நாசி வழியாக உள் செல்லும் சுவாசத்தையும் வெளியே செல்லும் சுவாசத்தையும் கவனிக்க வேண்டும்.
அவ்வாறு கவனிக்கின்ற போது சுவாசத்தில் உருவாகும் சப்தத்தை உணர வேண்டும் அந்த சப்தம் ஆனது உள் செல்லும் பொழுது அம் என்ற சப்தத்துடனும் வெளிவருகின்ற பொழுது உம் என்ற சப்தத்துடனும் இயங்குவதை சும்மா இருந்து கவனித்து வாருங்கள் இந்த சுவாசமானது உங்களுக்கு இயல்பாக நடக்கக்கூடிய சுவாசத்தினை கவனித்தல் ஆகும்.

மூச்சு பயிற்சியினை போல் மூச்சை உள்ளிழுத்தல் கூடாது இயல்பாக சுவாசிக்கின்ற சுவாசத்தை மட்டுமே கவனிக்க வேண்டும் இதுதான் நீங்கள் யோகத்தில் நுழைவதற்கு உங்களைத் தயார் படுத்தக் கூடிய யோகமுறை இந்த யோகத்தினை தொடர்ந்து 48 நாட்கள் பயிற்சி செய்து வாருங்கள்.

உணவு முறைகள்

அரைவயிறு அன்னம் கால் வயிறு காற்று கால் வயிறு நீர் என்ற அளவுகளில்தான் நீங்கள் உணவு அருந்த வேண்டும்.

காலையில் இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் கணக்காய் உண்டு வரவேண்டும்.

இதில் காலையில் இஞ்சி நமது ஆள்காட்டி விரலில் ஒரு அங்குல நீளத்திற்கு வெட்டி அதன் மேலுள்ள தோலினை நீக்கு மிக்ஸியில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப்போட்டு அரைக்க வேண்டும் பின்பு அதில் 50 மில்லி அளவாக நீர் சேர்த்து மீண்டும் இரண்டு மூன்று சுற்றுகள் அரைத்தால் இஞ்சி கசாயம் கிடைக்கும் இதனை சற்று நேரம் அப்படியே வைத்திருக்க அதில் உள்ள கசடுகள் கீழே படிந்து விடும் மேல் உள்ள நீரினை வேறொரு டம்ளரில் ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி குடிக்கலாம்.
அல்லது 250 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தேனினை சேர்க்க வேண்டும் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருக்க இஞ்சித் தேனூறல் கிடைக்கும் இதை ஆறாவது நாள் முதல் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் வீதம் வெறும் வயிற்றில் காலையில் உண்டு வர வேண்டும்.

கடும்பகல் சுக்கு

சுக்கின் மேல் தோலினை நிக்கி அல்லது சுண்ணாம்பினால் சுக்கின் மேல் பூசி வெயிலில் காயவைத்து மீண்டும் சுண்ணாம்பு பூசி மீண்டும் வெயிலில் காய வைத்து நன்றாக காய்ந்த பின்பு அதனை நெருப்பில் சுட்டு எடுக்க சுண்ணாம்பு கருத்திருக்கும் இதனை இலகுவாக தட்ட சுண்ணாம்புடன் சுக்கின் மேல் தோல் நீக்கி விடும் பிறகு இந்த சுக்கினை சூரணம் செய்து மதிய உணவுக்குப் பின் ஒரு ஸ்பூன் அளவாக எடுத்து சுடு நீரில் கலக்கி அருந்த வேண்டும்.

மாலையில் கடுக்காய்

கடுக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கி மேலுள்ள தோலினை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும் இது கடுக்காய் சூரணம் இதனை இரவு உணவுக்குப் பின் ஒரு ஸ்பூன் அளவு சுடுநீரில் கலக்கி அருந்த வேண்டும் இதுதான் நமது திருமூலர் கூறிய எளிமையான மனிதர்களும் பின்பற்றக்கூடிய மிக அருமையான நோய் நீக்கும் மருந்து.

நீங்கள் யோகத்தினை ஆரம்பிப்பதற்கு முன் ஆசனத்தில் அமர்ந்து இருபத்தியொரு முறை நாடி சுத்தி செய்துகொள்ள வேண்டும்

நாடி சுத்தி முறை

இடகலையில் பூரித்து பிங்கலையில் இரேசித்தல் பிங்கலையில் பூரித்து இடகலையில் இரேசித்தல் இது ஒரு சுற்று இதுபோல் 21 முறை இடது பக்கம் மூச்சினை இழுத்து வலது பக்கம் விட்டு வலது பக்கம் மூச்சினை இழுத்து இடது பக்கம் விட்டு பழக வேண்டும் இது அனைவரும் செய்யலாம்.
உரை மருந்து ( குழந்தைகளுக்கு )
குழந்தை பிறந்த 10 – 15 நாட்களிலிருந்து 5 – 7 வயது வரைதொடர்ந்து உரை மருந்து கொடுக்கலாம்.
கடுக்காய், சித்தரத்தை, சுக்கு, ஜாதிக்காய்,மாசிக்காய், வசம்பு என்ற ஆறு கடைச்சரக்குகள்.
நெல்லைப் புழுக்குவதற்கு வேக வைக்கும்போதுநெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும்..
அரை வேக்காடு ஏற்பட்டதும் (காய்களை அழுத்தினால் அழுந்தும் பதம் வந்தவுடன்)எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.உரை மருந்து தயார்.
******
கை அகலத்திலுள்ள உரைகல் ஒன்று தேவை.
அதில் வெந்நீர், வெற்றிலைச் சாறு, துளசிச் சாறு,ஓமகஷாயம், இஞ்சிச் சாறு இவற்றில் ஒன்றைவிட்டுஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி 2 அ 5 தடவை உரைத்து வந்த விழுதைத்தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவும்.
வாயு, சளி -வெந்நீர்; சளி, மப்பு -வெற்றிலைச்சாறு,துளசிச் சாறு, தேன்; வயிறு மந்தம், வயிற்றுப்போக்கு-ஓமகஷாயம், தேன். மப்பு, ஜ்வரம், வாந்தி -இஞ்சிச்சாறு,தேன் என்று மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
கடுக்காய் :
நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும்.புளிப்பு(வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும்.அஜீரண பேதியைத் தடுக்கும்.குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.
சுக்கு :
வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.
சித்தரத்தை :
தொண்டை மார்பு இவற்றில் கபக்கட்டு, உடலில் கடுப்பு வலி இவற்றில் நல்லது. எண்ணெய் தேய்த்தால் ஜ்வரம் சளி பிடிக்கும் என்ற நிலையில் இதனைத் தொடர்ந்து கொடுக்கலாம். தொண்டை-வாய்ப்புண், வறட்டிருமல், வயிற்று வேக்காளம் உள்ள நிலையில் சித்திரத்தையைக் கொடுக்கக்கூடாது. கபக்கட்டுள்ள நிலையில் இதனையும், சுக்கையும் அதிகம் உபயோகிக்கலாம்.
ஜாதிக்காய் :
இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.
மாசிக்காய் :
வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.
வசம்பு :
இதுவும் கடுக்காயும், பிள்ளை வளர்ப்பான் என்ற பெயர் பெற்றவை. பசியின்மை, சுறுசுறுப்பின்மை, ருசியின்மை இவற்றைப் போக்கும். பரபரப்பு, சிடுசிடுப்பு, அமைதியின்மை இதனைச் சீராக்கும். பால் ஜீரணமாகாமல் வெளுத்து மலம் போவது, கீரிப்பூச்சி, உப்புசம், வயிற்றுவலி, மார்பில் கபச்சேர்வை இவற்றைப் போக்கும். உடல் சீராக வளர உதவும்.
கார மருந்து என இதற்குப் பெயர். அதனால் உரைத்த மருந்தை சிறுகச்சிறுகச் புகட்ட வேண்டும். தேன் சர்க்கரை சேர்த்து இனியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். சிறு சிசுவிற்கு 10 – 15 உரைப்பு வரை தேவைப்படும். மூளைக்கும் குடலுக்கும் நல்ல செயல் திறனைத் தரும் இம்மருந்தை குழந்தைகளுக்கு ஏழு அல்லது எட்டு வயது முடியும் வரை தொடர்ந்து கொடுத்து வரலாம்.

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...