Saturday, 28 July 2018

தத்துவமஸி

தத்வமஸி அதன் அர்த்தமும்:

தத்-பரப்பிரம்மம் த்வம்-ஜீவாத்ம சொரூபியயிருக்கப்பட்ட நீ, அஸி-ஆகின்றாய்.

அதாவது இந்த காயத்திரி மந்திரம் ஜபித்து வந்தால் ஜீவாத்ம சொரூபியா இருக்கப்பட்ட நீ அந்த சாஷாத் பரப்பிரம்ம சொரூப மாகின்றாய்.

காயத்ரி மந்திரமும் அதன் அர்த்தமும்:

ஓம்பூ, ஓம்புவ ஓம்ஸுவ ஓம்மஹ ஓம்ஜந ஓம்தப ஓம்ஸத்யம் ஓம்தத்ஸவி துர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ நம ப்ரசோதயாத் ஓம் ஆபோஜயோ தீரஸோ ம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ரோம்.

தத்ஸவி துர்வரேண்யம் 'அ' அகாரம்
பர்கோ தேவஸ்ய தீ மஹி 'உ' உகாரம்
தியோயோ நம ப்ரசோதயாத் 'ம' மகாரம்

அகார உகார மகார இம்மூன்றும் சேர்ந்தது ஓங்காரம் இதுவே ஏகாசரம் இதுவே பிரணவம்

பிரணவமும் அதன் அர்த்தமும்:

பிரணவம் என்பது அ-உ-ம இம்மூன்றும் சேர்ந்து ஓம் என்று சப்தமுண்டாயிற்று.

'அ' காரம் - பிரம்மா - ரேசகம்
'உ' காரம் - விஷ்ணு - பூரகம்
'ம' காரம் - ருத்திரன் - கும்பகம்

மேற்சொன்ன மூன்றையும் அறிந்து கொண்டு முதல் அநுஸ்டானத்திற்குக் கொண்டு வர வேண்டியது சரம் இந்தச்சரம் நாசியின் வழியாய் உசிவாச(உசுவாச- வெளியிடும் சுவாசம்), நிசுவாசமாக ( நிசுவாசம்- உள்ளே போகும் சுவாசம்) நாளொன்றுக்கு நடைபெறும் 21600 சுவாசங்களில் சந்திரன் (இடகலை-இட நாசி) சூரியன் ( பிங்கலை- வலது நாசி ) அக்னி (சுழுமுனை- இரண்டு நாசி) என மூன்று நாடிகளாக நடக்கும்.

இடது நாசியில் வரும் சந்திரநாடி சத்தி என்றும் வலது நாசியில் வரும் சூரிய நாடி சிவம் என்றும் மத்தியமாக  மூலாதாரத்தைத் தொட்டு பிரமகபாலம் வரையில் இரண்டறக் கலந்ததாக நடக்கும் சுழுமுனை நாடி 'அலி' என்றும் 'அக்கினி' என்றும் ஜீவப்பிரம்மம் என்றும் சொல்லப்படும்.

ஜாமம் ஒன்றுக்கு நாளிகை ஐந்தாக முதல் ஜாமம் காலை நாலு மணி முதல் மாலை வரையில்
வெள்ளி - திங்கள் - புதன் கிழமை= சந்திர நாடி
ஞாயிறு- செவ்வாய்-சனி கிழமை= சூரிய நாடி
வளர்பிறை வியாழக் கிழமை  சூரிய நாடி
தேய்பிறை வியாழக் கிழமை சூரியனாடியும்
சனிக்கிழமை இராப்பகல் சூரிய நாடி நடக்க வேண்டும்- இதுவே வார சரம் ஆகும்

இத்தகைய சரபீஜம் சரிவர தொண்ணூறு நாள் அப்பியாசத்தால் கொண்டு வந்த பிராணாயாமம் சரீரத்திலுள்ள சர்வ வியாதிகளையும் நீக்கி பரிசுத்தபடுத்தும்

இதற்கு பிறகு கும்பகத்தில் உடல் ஆவி மனம் மூன்ரும் ஒன்றுபட்டு உள்ளொளி தோன்றும் அதுவே பிரமா, விஷ்ணு, ருத்திரன். முதலிய பல தெய்வங்களாக கொண்டாடப்பட்டது. அந்நிலையை சோதிஎன்றும்  ஞானம்என்றும் கடவுள்என்றும் மோட்சம்என்றும் சொல்லப்படும் அதை அடைந்தவரே ஜீவன்முக்தர், யோகி, ஞானி, கடவுள், அவரே எல்லாம் வல்ல இறைவன் ஆவார் ஓம் சிவா.

No comments:

Post a Comment

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...