Tuesday, 31 July 2018

சித்தர்கள் அருளிய சிவ(வசி)யோகம்

சித்தர்கள் அருளிய சிவ(வசி)யோகம்
“உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே”
உடம்பை வைத்தே உயிரைநீடிக்க இயலும் ஆதலின் சித்தர்கள் உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். உடம்பை வளர்த்தல் என்பது உடல் சதைப்பிடிக்க நன்றாக உண்டு வளர்த்தல் அல்ல, உடலில் நரை திரை மூப்பு பிணி இவை இல்லாது உடலை வளர்த்தலேயாம். உடலில் நரை திரை மூப்பு பிணி உண்டாக காரணம் உடலில் உள்ள வாத பித்த கபம் சமநிலை மாறுதலே.
வாதம்:-  நம் உடலில் இயக்கத்தையும், தசை மூட்டு, எழும்புகளின் இயக்கத்தையும், சுவாசத்தையும், உடல் கழிவுகளை வெளியேற்றுதலும்
பித்தம்:- உடலின் வெப்பநிலையையும் ரத்த ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லா சுரப்பியின் இயக்கத்திற்கும்.
கபம்:- நீர்த்துவத்தையும் நெயப்புத்தன்மையும் தந்து உடல் பணிகளை செய்கின்றன
இவை “மிகையினும் குறையினும் குற்றமாம்”
இதற்க்கு காரணம் முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்காததே, முறைப்படுத்தப்பட்ட உணவுப்பழக்கத்தால் நிச்சயம் இவற்றை வெல்லலாம்
“காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலங்
கணக்காய்உண்டு வரின் கொலூன்றிய
கிழவனும் கோலைவீசிமிடுக்காய் நடப்பானே”
காலையில்: எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு துண்டு இஞ்சியை அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டி சிறிது நேரம் வைத்திருந்து பின்பு மேலுள்ள தெளிவு நீரை மட்டும் எடுத்து அதனுடன் தேன்சேர்த்து அருந்தவேண்டும். இதனால் பித்தம் சமநிலைப்படும்.
மதியம்: உணவுக்கு முன் சுக்கு பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து அருந்தி 30 நிமிடம் கழித்து உணவு உண்ணவேண்டும். இதனால் வாயு சமநிலைப்படும்.
இரவு: உணவுக்கு பின் ஒரு ஸ்பூன் அளவாக பொடிசெய்த கடுக்காயை வெந்நீரில் கலந்து குடிக்கவும். இதனால் கபம் சமநிலைப்படும்.
இவ்வாறு அனுதினமும் கடைபிடித்துவரின் உடலுக்கு கேடு வராது.
உணவுமுறை
காலையில்: சமைக்காத உணவே சிறந்தது அவ்வாறு காலையில் பழங்கள், தானியங்கள், பயறு வகைகள் ஊறவைத்து முளைக்கட்டியது, காய்கறிகள், கிழங்குவகைகள். இவைகளே காலையில் உண்ணவேண்டும்.
மதியம்: அரிசி உணவு குறைவாகவும் அதனுடன் காய்கறி, கீரைகள் அதிகமாக எடுத்துக்கொள்ளவும்
இரவு: உணவு மிதமான உணவாக இருக்கவேண்டும்.
“அரைவயிறு அண்ணம் கால்வயிறு நீர் கால்வயிறு காற்று” நிரம்பியவாறு உண்ணப் பழக வேண்டும்
இதுபோன்ற உணவுமுறைகளைக் கடைபிடித்து உடலைப் பாதுகாத்தல் அவசியம். உடல் உயிரைக்காக்க சித்தர்கள் கூறிய சூட்சமமே
“வாதம், வைத்தியம், யோகம், ஞானம்”
வாதம் என்பது காற்று உடலில் இயங்கும் காற்றை வைத்தே உடலின் அனைத்து செயலும் தீர்மானிக்கப்படுகிறது ஆக காற்றைப்பிடி
வைத்தியம் என்பது நோயினை நீக்கும் முறை உடலின் நோயினை நீக்கும் வழி தெரிந்திருக்க வேண்டும்
யோகம் என்பது ஒருநிலைப்படுதல் எப்போதும் மனம் சஞ்சலப்படாது ஒருநிலையில் வைத்திருக்கும் சூட்சம் அறிந்தோன் யோகி
ஞானம் என்பது நுண்ணுணர்வால் அடையும் அனுபவத் தெளிவு ஞானம்
 நாம் முதலில் இந்த சிவயோகத்திற்க்கு தயாராகுவது எப்படி?
அலைபாயும் மனதை அடக்குவது கடினம் ஆனால் ஒடுக்குவது எளிது. நம்மில் பலர் மனதை அடக்கி யோகம் பயில்கிறேன் என்று சொல்லி திரிகின்றனர் ஆனால் அது அவர்களால் இயலுவதில்லை காராணம் மனதை அடக்கினால் அது என்றேனும் ஒருவழியில் தன்னை வெளிப்படுத்தும். ஒடுக்குதல் என்பது மிக எளிதாக நடைபெறக்கூடியது இதைத்தான் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்
முன்னோர் கூறிய வழியில் நடப்பது வழி படுதல் (நடப்பது) ஆகும்  இந்த வழிபடுதல் முறை பிற்காலத்தில் வழிபாட்டுத் தலங்களாயிற்று,
ஒரு உண்மையை உணர வேண்டும்
கற்ப கிரகத்தில் இருக்கும் உருவம் உம்மை போன்ற (தெய்வ) உருவம் அதற்கு செய்கின்ற அனைத்து அபிசேகமும் (நீர், பால், தயிர், நெய், தேன், பழம், இளநீர், பஞ்சாமிர்தம், பன்நீர், சந்தனம், மஞ்சள், குங்குமம்/விபூதி, அழகு ஆபரனங்கள் அணிவித்தல்) என அபிசேகித்த சிலைக்கு ஆடை ஆபரணம் அணிவித்துக் காட்டும் தீப ஆராதனை உன்னுள் இருப்பது ஆன்மா (ஜோதியே) என சிலையின் (தெய்வ) முகத்திற்கு நேரே காட்டி இவ்வுடலில் ஆன்மா இருப்பது புருவ மத்தியில், இந்த ஆன்மாவே இவ்வுடல் எடுக்கக் காரணமாயிற்று என்று உச்சி முதல் பாதம் வரை காட்டி மீண்டும் மேலேற்றி இதை அனைவரும் உணர்க என சூட்சமத்தை காட்டிய பின் நம்மிடம் ஆரத்தி தட்டு வரும் போது ஆம் இவ்வழியே என் ஆன்மாவை உணர்கிறேன் என்று தீபத்தைத் தொட்டு கண்ணில் ஒற்றி, பிறகு கொடுக்கும் திருநீரை(குங்குமம்) நெற்றியில் இட்டு என் ஆன்மாவை இங்கு உணர்கிறேன் என உணரச்செய்வது வழிபடுமுறை,
ஆனால் நாம் கோவிலில் இறைவனை வணங்குகின்றபோதோ நம்முள் நடப்பது
“மனம் ஒன்றை நினைக்க காதொன்றை கேட்க்க
கண்ணொன்றை பார்க்க மூக்கொன்றை நுகர”
இறைவனை எப்படி காண இயலும்.
சிவ சிவ என்பதே வசி வசி மூச்சிலே இயங்கும் பிராணனை முறையாக இயக்கும் சூட்சமமே அனைத்துப் பழங்கால சிவ ஆலயங்களில் நம் முன்னோர்கள் உணர்த்தியதும்.
“மூக்கில் வருவதும் போவதுவும்  இயல்பாய் நடப்பது சுவாசம்
இயல்பாய் நடப்பதை கவனித்தல் வாசி ஆகும்”
இவ்யோகம் பயில விரும்பும் அன்பர்கள் தகுந்த ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து தான் தனித்திருந்து வெண்துகில், கம்பளி, தர்ப்பை விரிப்பில் பதுமம், வீரம், கோமுகம், வஜ்ரம் போன்ற ஏதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்து தலை, முதுகு, கழுத்து நேராய் நிமிர்த்தி கண்ணை மூடி
உங்கள் குலதெய்வத்தை வணங்கி,
பின் இஷ்டதெய்வத்தை வணங்கி,
தாயையும் தந்தையையும் வணங்கி
ஆதிகுருவே வருக  சிவகுருவே வருக
கந்த குருவே வருக சர்வ சித்தர்களும்
யோகிகளும் ஞானிகளும் குருவாய் வருக
இச்சிவயோகத்தினையருளி வழிநடத்த
ஞான குருவே வருக வருகவே!!!!!
என வணங்கி இரு கண்விழிகளை திறந்து மூக்கு நுனியை பார்க்கவேண்டும். பார்வை மூக்கு நுனியிலும், உங்கள் மனம் மூக்கில் உள்ளும் வெளியும் வந்து செல்லும் சுவாசத்திலும் இருக்க வேண்டும். காது மூக்கிலே இயங்கும் சுவாசத்தில் உண்டாகும் சப்தத்தை கவனிக்க வேண்டும். இவ்வாறு கண், காது, மூக்கு, வாய், மெய் என அனைத்தும் மூச்சிலே ஒடுங்கி இருப்பதால் எண்ணமற்ற, உடல் இயக்கமற்ற ஏகாந்த இறைநிலையை உன்னிலே காணலாம்
“ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டெரித்து
தூங்காமல் தூங்கி சுகம்பெருவது எக்காலம்”
“ஓடாதே ஒடுங்காதே ஒருமந்திரமும் பண்ணாதே சும்மா இரு”
உன் சித்தம் தெளிய வேண்டுமாயின் இவ்யோகத்தை பயின்று மாயப் பிறப்பறுக்க அவனருளால் மட்டுமே இயலும் ஆதலின் சித்தர்களை குருவாய் கொண்டு அவர்கள் வழங்கிய யோகத்தின் மூலம் சிவத்தை அடைய முயற்சிப்போர் இவ்வுலக நலன்களைப்பெற்று சிவநிலை அடைய ஆதிகுருவின் அடிபற்றி வேண்டுகிறேன்.

Saturday, 28 July 2018

அசபை யோகம் 1

அசபை யோகம் 2


குண்டலி யோகம்


தத்துவமஸி

தத்வமஸி அதன் அர்த்தமும்:

தத்-பரப்பிரம்மம் த்வம்-ஜீவாத்ம சொரூபியயிருக்கப்பட்ட நீ, அஸி-ஆகின்றாய்.

அதாவது இந்த காயத்திரி மந்திரம் ஜபித்து வந்தால் ஜீவாத்ம சொரூபியா இருக்கப்பட்ட நீ அந்த சாஷாத் பரப்பிரம்ம சொரூப மாகின்றாய்.

காயத்ரி மந்திரமும் அதன் அர்த்தமும்:

ஓம்பூ, ஓம்புவ ஓம்ஸுவ ஓம்மஹ ஓம்ஜந ஓம்தப ஓம்ஸத்யம் ஓம்தத்ஸவி துர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ நம ப்ரசோதயாத் ஓம் ஆபோஜயோ தீரஸோ ம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ரோம்.

தத்ஸவி துர்வரேண்யம் 'அ' அகாரம்
பர்கோ தேவஸ்ய தீ மஹி 'உ' உகாரம்
தியோயோ நம ப்ரசோதயாத் 'ம' மகாரம்

அகார உகார மகார இம்மூன்றும் சேர்ந்தது ஓங்காரம் இதுவே ஏகாசரம் இதுவே பிரணவம்

பிரணவமும் அதன் அர்த்தமும்:

பிரணவம் என்பது அ-உ-ம இம்மூன்றும் சேர்ந்து ஓம் என்று சப்தமுண்டாயிற்று.

'அ' காரம் - பிரம்மா - ரேசகம்
'உ' காரம் - விஷ்ணு - பூரகம்
'ம' காரம் - ருத்திரன் - கும்பகம்

மேற்சொன்ன மூன்றையும் அறிந்து கொண்டு முதல் அநுஸ்டானத்திற்குக் கொண்டு வர வேண்டியது சரம் இந்தச்சரம் நாசியின் வழியாய் உசிவாச(உசுவாச- வெளியிடும் சுவாசம்), நிசுவாசமாக ( நிசுவாசம்- உள்ளே போகும் சுவாசம்) நாளொன்றுக்கு நடைபெறும் 21600 சுவாசங்களில் சந்திரன் (இடகலை-இட நாசி) சூரியன் ( பிங்கலை- வலது நாசி ) அக்னி (சுழுமுனை- இரண்டு நாசி) என மூன்று நாடிகளாக நடக்கும்.

இடது நாசியில் வரும் சந்திரநாடி சத்தி என்றும் வலது நாசியில் வரும் சூரிய நாடி சிவம் என்றும் மத்தியமாக  மூலாதாரத்தைத் தொட்டு பிரமகபாலம் வரையில் இரண்டறக் கலந்ததாக நடக்கும் சுழுமுனை நாடி 'அலி' என்றும் 'அக்கினி' என்றும் ஜீவப்பிரம்மம் என்றும் சொல்லப்படும்.

ஜாமம் ஒன்றுக்கு நாளிகை ஐந்தாக முதல் ஜாமம் காலை நாலு மணி முதல் மாலை வரையில்
வெள்ளி - திங்கள் - புதன் கிழமை= சந்திர நாடி
ஞாயிறு- செவ்வாய்-சனி கிழமை= சூரிய நாடி
வளர்பிறை வியாழக் கிழமை  சூரிய நாடி
தேய்பிறை வியாழக் கிழமை சூரியனாடியும்
சனிக்கிழமை இராப்பகல் சூரிய நாடி நடக்க வேண்டும்- இதுவே வார சரம் ஆகும்

இத்தகைய சரபீஜம் சரிவர தொண்ணூறு நாள் அப்பியாசத்தால் கொண்டு வந்த பிராணாயாமம் சரீரத்திலுள்ள சர்வ வியாதிகளையும் நீக்கி பரிசுத்தபடுத்தும்

இதற்கு பிறகு கும்பகத்தில் உடல் ஆவி மனம் மூன்ரும் ஒன்றுபட்டு உள்ளொளி தோன்றும் அதுவே பிரமா, விஷ்ணு, ருத்திரன். முதலிய பல தெய்வங்களாக கொண்டாடப்பட்டது. அந்நிலையை சோதிஎன்றும்  ஞானம்என்றும் கடவுள்என்றும் மோட்சம்என்றும் சொல்லப்படும் அதை அடைந்தவரே ஜீவன்முக்தர், யோகி, ஞானி, கடவுள், அவரே எல்லாம் வல்ல இறைவன் ஆவார் ஓம் சிவா.

சித்தம் சிவனோடு ஆட

உயிர்க்காற்று, மலக்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று, தொழிற்காற்று ஆகிய ஐந்தும் காட்டுப் பசுவையொக்கும்.

அறிதல் கருவியாகிய செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு என்னும் ஐந்தும்,
செய்தல் கருவியாகிய, வாய், கால், கை, எருவாய், கருவாய் என்னும் ஐந்தும்; எண்ணம், எழுச்சி, இறப்பு என்னும் மூன்றம் ஆகிய பதின்மூன்றும் அரியேறு ஒப்பாகும். திருவடி சேரவேண்டுமென்னும் ஒருபெரும் நோக்கத்தால் 'சித்தம் சிவனொடும் ஆட ஆட....
பிறவி பிறரொடும் ஆட ஆட' நிற்கும்.
சொல்லறிய தாய் பதத்தைத் துதிக்க வேணும்
துன்பமறப் பேரின்பம் தோய வேணும்
நல்லபொருள் நடுவனையில் இன்பம் கண்டு
நாதாந்தப் பேரொளியை அறிய வேணும்
இல்லமதில் இருந்து முத்திபெறவே வேணும்
எட்டெட்டும் அடக்கி வெளியேற வேணும்
அல்லல் அறுத்து எனைஆண்ட ஆயிபாதம்
அகாரமுதலுகாரம் என்று அறிந்துகொள்ளே.

திப்பிலி

திப்பிலி = திப்பி-கோது. இலி - இல்லாதது. எனவே கோது இல்லாதது. குற்றமற்றது என்றாகும். சுக்கு மிளகு திப்பிலி மூன்றும் முறையே வாதம், பித்தம், கோழை மூன்றறுக்கும் மாற்று மருந்தாகும். இம் மூன்றினுள் கோழையே மிகக் கொடுமை வாய்ந்தது. அதுவே இறப்பினைத் தருவது. அதனை நீக்குவது திப்பிலி.
இதன் பண்புகள் வருமாறு: நினைத்தல், கற்றல், நெடும் புகழ் உரைத்தல், தொண்டுபுரிதல், மலர்தூவிப் போற்றல், நட்டம், வணங்கல், நாடியின்புறல், முனைப்பறல் என்னும் ஒன்பதும் அரும்பெரும் பண்புகளாகும். இவையே திப்பிலி என்ப. இவை நம்மனத்து நினைத்து எல்லைப்பட்டு நம்வயப்படுதல்வேண்டும். அப்பொழுது செருக்கு முதலிய அறுபகையும் அகன்று அறும்.

வாசி நிலை

தானாகித் தான் முடிந்த சூட்சந் தன்னைத் தரணிதனில் அறியாமல் தான் தான் என்றே வானாகி நின்ற திருஉடலைக் காணான்
உடலில் நின்ற அட்சரத்தில் உறுதி காணான்
ஆணாகி நின்ற திருவாசி காணான்
அமர்ந்து நின்ற வாசி திருநயனம் காணான்
ஊனாகி நின்ற அடி முடியம் காணான்
மதிகெட்டு விதி அறிந்து மாளுவாரே.

சிவயநம 🌞🙏🌙

கரு உரு உருவாதல்

தகப்பனும் தாயுமங்கு புணரும்போது
தானென்று கருப்பிடித்து கொண்டுவந்த
நாதனை நீஎந்நாளும் வணங்கி நில்லு

என்று கூறிய காகபுஜண்டரின் ஞானத்தில் கூறியிருப்பதை உணருங்கள் அன்பர்களே

தாயும் தகப்பனும் சேர்ந்து புணர்ந்து உருவாக்கிய கரு மூன்று மாதம்வரை உயிர்ப்பு அற்ற பிண்டமாக தாயின் கருவரையில் வளர்ந்ததும் மூன்றாவது மாதம் குழந்தையின் பிண்டத்தை ஆத்மா பிடிக்கிறது அவ்வாறு பிடித்ததும் இப்பிண்டத்தை வளைத்து ஓம் வடிவில் இருத்தி ஏழு மாதம் ஆத்மா இப்பிண்டத்தை தவத்தில் அமர்த்துகிறது பின் பிரசவத்தின்போது வெளிவரும் தவப்பிண்டம் பனிக்குடம் உடைந்ததும் மூச்சாகிய உயிர்பை பெற்று இயங்கத்தொடங்குகிறது எனினும் மனம் எண்ணம் அறிவு மூன்றும் ஆன்மாவில் ஒடுங்கி இருப்பதால் சதா காலமும் குழந்தை ஏகாந்தத்தில் இருக்கிறது என்று நாம் அக்குழந்தைக்கு பெயர் வைத்து சர்க்கரை தண்ணீர் அதன் வாயில் இடுகிறோமோ அக்கனம் அங்குழந்தையின் தவம் களைந்து சர்க்கரையின் சுவை அதன் மனதில் பதிந்து அம்மனதில் பதிந்த எண்ணத்திற்க்காக கண்டதை எடுத்து வாயில் வைத்து சுவைக்க செயல்படுகிறது படிப்படியாக நாவின் சுவைக்காக குழந்தையின் மனம் எண்ணம் அறிவு மூன்றும் ஆத்ம நிலையில் இருந்து விலகி நா சுவைக்கும் உடல் சுவைக்கும் புறத்தில் (செயல்பட) செயல்பட்டுக்கொண்டு உள்ளதை மீண்டும் ஆத்ம நிலைக்கு வந்த நோக்கத்திற்கு செயல்பட வலியுறுத்துகிறேம்.

சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று

சிவயநம 🌞🙏🌙

நீயே அதுவாகிறாய்

தானே தானாய் இருந்த தத்துவமும் சகல கலையான பிராணணுயிர் நீதான்.

இதைவிட்டு வீணாகத் திரிந்தலைந்தால் பின் சொன்னவைகள் உன் பின்னால் தானாக வருமா?

மெய்யான பூரணத்தை விரும்பி வைராக்கியமாய் நில்.

சக்தியை அறிந்து உள்ளம் மகிழ்து பார்.

நீ தேடும் உலகம் வேறு எங்கோ இல்லை.

நீயேதான் உலகம்.

உனக்குள்ளேதான் உலகம் இருக்கிறது.

இவற்றை உணர்ந்து பார்

மூலக்கணலை தூண்டி தத்துவத்தை பார்.

அது நீயேதான்.

காலதனை பூரணத்தால் பற்றி அறிவதனை சார்ந்து கொண்டு மண் மீதில் தண்ணீர் ஊற்று.

அது விண் மீது ஏறி வாழும்.

இதற்கு நீ குரு பீடத்தில் நிற்க வேண்டும்.

அப்போதுதான் நெருப்பாறு மயிர் பாலம் தப்பாமல் மதியமுர்தத்தின் அருவியைக் காண முடியும்.

இதற்கு தெளிவான மன உறுதியும் வேண்டும்.

ஆராயாதே ஆராய்ந்து அந்தம் காணாது மாண்டவர் கோடி பேர்.

தத்துவத்தை உணர முற்படு

சிவயநம 🌞🙏🌙

சித்தர்களின் ஞான யோக மையம்

இயமம் நியமம் கடைபிடித்து மனதை ஒருநிலைப்படுத்தி தன்னுள் சிவத்தை காணும் யோகம் சிவயோகம் இதுவே இராஜ யோகத்தில்  மேன்மையானது என்றும், கர்ம வினை அறுத்து முக்தி பெற சிறந்ததாக நம் சித்த பெருமான்கள் இச் சிவயோகத்தை தத்தமது ஞான பாடல்களில் வலியுறுத்தி உள்ளதை காணலாம்.

இதன் அடிப்படைகளைதான் நாம் இங்கு பல முறை பயிற்சியாக நமது  "சித்தர்களின் ஞான யோகம்" மையம் என்ற  வாயிலாக சித்தர்கள் கூறிய ஞான யோகமாகிய சிவயோகத்தை அனைவரும் பெற்று சிவகதி அடைய முயற்சித்து வருகிறோம்.

"கற்றது கைமண் அளவு"

எமக்கு உணர்த்தியதை எல்லோரும் உணரவேண்டும் என்ற வேண்டுதலோடு சித்தர்களின் பாதம் பணிந்தும் சிவனது திருவடி வணங்கியும் செயல்படுகிறோம்,

இங்கு "சித்தர்களின் ஞான யோகம்" என்ற WhatsApp குழுவின் வழியாக வலியுறுத்தியும் வருகிறோம்,

இது ஆரம்பம் முதல் நம் குழுவில் அங்கத்தினராக உள்ளவர்கள் அறிவர்.

சித்தர்கள் கூறிய ஞான யோகமாகிய சிவயோகத்தை இன்று பலரும் பல வழிகளில் மாற்றி இவர்கள் புதிதாய் கண்டுபிடித்தது போல வழங்கி வருகின்றனர், எதுவும் புதிதல்ல என்பதை உணருங்கள்.

சித்தர்கள் உரைத்தது அனைத்து சீவனே சிவன், உன் உடம்பில் இருப்பதும் சிவனே என்றறிய சிவயோகத்தை கடைபிடித்து
சிவ சிவ என்றிட சிவ கதி தானே என சூட்சமமாய் உணர்த்தினார்கள்.

ஆதலால்தான் நாம் ஆரம்பம் முதலே சூட்சமத்தை அறிய முயற்சியுங்கள் என கூறி வந்தோம்

அற்றது பொருந்த உற்றது விளங்கும்

இதுவே சத்தியம்
இதுவே நித்தியம்
இதுவே ஆனந்தம்

அனைவரும் இயமம் நியமம் கடைபிடித்து மனதை தன்னுள் அடக்கி சிவத்தை உணர்ந்து சிவகதி அடைய முயற்சியுங்கள் சித்தம் கைகூட சிவன் அவனை சிந்தையில் வைத்து எந்நாளும் தொளுது நில்லுங்கள்

இங்கு உரைத்ததில் நல்லவற்றை ஏற்றுக்கொண்டு அல்லவற்றை தவிற்க்க வேண்டுகிறேன்

சிவயநம🌞🙏🌙

வழிபடு முறை

சிவயநம

சிவ சிவ என்பதே வசி வசி
மூச்சிலே இயங்கும் பிராணனை முறையாக இயக்கும் சூட்சமமே அனைத்து பழங்கால சிவ ஆலயங்களில் நம் முன்னோர்கள் உணர்த்தியதும்.

முன்னோர் கூறிய வழியில் நடப்பது வழி படுதல் (நடப்பது) ஆகும்
இந்த வழிபடுதல் முறை பிற்காலத்தில் வழிபாட்டு தலங்களாயிற்று,

ஒரு உண்மையை உணர வேண்டும்

கற்ப கிரகத்தில் இருக்கும் உருவம் உம்மை போன்ற (தெய்வ) உருவம் அதற்கு செய்கின்ற அனைத்து அபிசேகமும்(நீர், பால், தயிர், நெய், தேன், பழம், இளநீர், பஞ்சாமிர்தம், பன்நீர், சந்தனம், மஞ்சள், குங்குமம்/விபூதி) இந்த உடல் வளர்ச்சிக்கு தேவையானதும் அழகு ஆபரனங்கள் அணிந்திருந்தாலும் உன்னுள் இருப்பது ஜோதியே(ஆன்மா) என
அபிசேகித்த சிலைக்கு ஆடை ஆபரணம் அணிவித்து காட்டும் தீப ஆராதனை முகத்திற்கு நேரே காட்டி இவ்வுடலில் ஆன்மா இருப்பது புருவ மத்தி , இந்த ஆன்மா வே இவ்வுடல் எடுக்க காரணமாயிற்று என்று பாதம்வரை காட்டி மீண்டும் மேலேற்றி அனைவரும் உணர்க என சூட்சமத்தை காட்டி நம்மிடம் ஆரத்தி தட்டு வரும் போது ஆம் இவ்வழியே என் ஆன்மாவை உணர்கிறேன் என்று தீபத்தை நமஷ்கரித்து கண்ணில் ஒற்றி, பிறகு கொடுக்கும் திருநீரை(குங்குமம்) நெற்றியில் இட்டு உணரச்செய்வது வழிபடுமுறை,

இதை உணராமல் அபிசேகம் ஆராதனை எல்லாம் சடங்காகவும், சம்பிரதாய வழக்கமாக கடைபிடிக்கும் சண்டாளர்களை என்செய்வேன் ஈசா.

"சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால் அவனருளாலே அவன்தாள் வணங்கி "

"ஊணுடம்பு ஆலயம் உள்ளம் பெருங்கோயில் ஜீவனே சிவன்"

உணர்க தெளிவு பெருக
சிவயநம🌞🙏🌙

தியானம்

சித்தர்கள் சொல்வதெல்லாம்,  “எதுவுமற்ற, எண்ணமற்ற, ஏகாந்த இறை நிலையே” யோகம் (தியானம்) என்பதாகும்.

சித்தர்களின் யோகக் கலைகளில்  சித்தர்கள் சொன்னதை சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல்
தியானத்திலே இறைவனைப் பார்த்தேன், பேசினேன், பயணம் செய்தேன், உயிர், கரு உருவானது என்றெல்லாம் சிலர் சொல்லக் கேட்போம். இவர்கள் அனைவருமே சித்த நிலையை அறியாத மூடர்களே!
என்பது சித்தர்கள் சொல்லும் வாக்கு.

இவர்கள் அனைவரும் கண்டதெல்லாம் தாரணையே.
தியானம் அல்ல!

தூக்கத்தில் நடந்தது நினைவிருந்தால் அது கனவு !
கனவு வந்தால் நாம் ஆழ்ந்து உறங்கவில்லை என்பதே உண்மை!

உண்மை இப்படி இருக்க, தியானப் பயிற்சிகள் என்ற பெயரில் தாரணையை மக்கள் மனதில் விதைத்ததின் விளைவாக சித்தர்களின் அறிய பொக்கிஷமான தியானம் இன்று பெரிதும் மக்களுக்கு சென்று சேராமல் உள்ளது. இது மாறவேண்டுமானால் சித்தர்களின் ஆசியோடு, உண்மையான நம்பிக்கையுடன் மனதை ஒருநிலைப் படுத்தி, சிவயோக பயிற்சியின் மூலமாக தியான நிலையை அடைய முற்பட வேண்டும்.

சிவயநம🌞🙏🌙

ஓம்காரம்

ஓம் என்ற பிரணவ மந்திரம் ஓரெழுத்து மந்திரம், இந்த ஓம் என்ற பிரணவம் அ-காரம் உ-காரம் ம-காரம் என்று மூவெழுத்து மந்திரமாக உயிர்ப்பாற்றளாய் நம்முள் இயங்கிக்கொண்டுள்ளது. மூவெழுத்தை அ-காரம் உ-காரம் ம-காரம் சரிவர இயக்கம் பெற்றால் ஆத்துமத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் சூட்சமவழிதான் இந்த ஓம்கார பிரணவம்.

Wednesday, 25 July 2018

மரணம் இல்லாது வாழ சித்தர் கூறும் வழிமுறைகள்

மனிதனுடைய மரணத்துக்குக் காரணம்?
தமிழகத்தில் வாழ்ந்த, சித்த வேதத்தைத்
தோற்றுவித்த ‘காகபுஜண்டர்’ எனும் சித்தர்,
மனிதருக்கு மரணம், நெஞ்சுச் சளி,
தொண்டைச் சளி, மண்டைச் சளி
ஆகியவற்றால்தான் ஏற்படுகின்றது என்றும்,

இச்சளிகள் மனிதனது உடலில்
இல்லையென்றால், மரணமில்லை என்றும்
கூறியுள்ளார். அவ்வாறாயின், மனிதருக்கு
மட்டும் நெஞ்சுச்சளி, தொண்டைச் சளி,
மண்டைச் சளி ஏன் வருகின்றது?

பால், பால் பொருட்களான தயிர், மோர்,
வெண்ணெய், நெய் ஆகிய உணவுகளும்,
அனைத்து அசைவ உணவுகளும், சமைத்த
தானிய உணவுகளும், உப்பும் நாம் தினமும்
சாப்பிடுவதால்தான் நமது உடலில் நெஞ்சுச்
சளி, தொண்டைச் சளி, மண்டைச் சளி
உண்டாகிறது. இவை எல்லாம் வெளியேறாது
அங்கேயே தங்கி, நாள்பட்டு மிகுதியாகி
மனிதருக்கு இறப்பை ஏற்படுத்துகின்றது.

உப்பு சேர்க்காமல் சமைத்த காய்கறிகள்,
கீரைகள் உண்பதால் உடலில் சளி உண்டாகாது.
மேலும் படிப்படியாக அல்லது எடுத்த
எடுப்பிலேயே அனைத்து சமையல்
உணவுகளையும் தவிர்த்து, சமைக்காத
இயற்கை உணவுகளான தேங்காயும்,
பழவகைகளையும் உணவாக
எடுத்துக்கொண்டு வாழ ஆரம்பிக்கும்போது,
உடலில் உள்ள அனைத்து சளிகளும்
படிப்படியாக உடலிலிருந்து
வெளியேறிவிடும். அதன்பின், சளி இல்லாத
வலி இல்லாத நோயில்லாத, இறப்புக்கு
வாய்ப்பில்லாத உறுதியான உடலாக அந்த
உடல் மாறிவிடும்.

உணவுப் பழக்கத்தைத் தவிர உடலை மேலும்
உறுதியுடன் ஆரோக்கியத்துடன்
வைத்துக்கொள்ள உதவுபவை யோகாசனம்,
பிராணயாமம், தியானம். தினந்தோறும்
இவற்றைச் செய்வதன் மூலமும் மரணமில்லாப்
பெருவாழ்வு வாழ வாய்ப்பு அதிகம் உள்ளது.

அவ்வப்போது விரத நாட்களில், அல்லது
வாய்ப்பு ஏற்படும் நாட்களில், நீர் உண்ணா
நோன்பு அல்லது சாறு உண்ணா நோன்பு
மேற்கொள்வதன் மூலமும் மரணமில்லாப்
பெருவாழ்வை அடைய முயற்சி? செய்யலாம்.

நீர் உண்ணா நோன்பு என்றால்,
பசித்தபோதெல்லாம், அல்லது தேவை
ஏற்படும்போதெல்லாம் எதுவும் சாப்பிடாமல்,
தூய்மையான குடி தண்ணீர் மட்டும்
தேவையான அளவு அருந்துதல் வேண்டும்.
இப்படி எத்தனை நாட்கள் தொடர்ந்து வெறும்
பச்சைத் தண்ணீரைக் குடித்து வாழ
முடியுமோ அதுவரை வாழ்வதாகும்.

சாறு உண்ணா நோன்பு என்றால்,
பசித்தபோதெல்லாம் அல்லது தேவை?
ஏற்படும்போதெல்லாம் எதுவும் சாப்பிடாமல்,
இளநீர், எலுமிச்சம் பழச்சாறு + பச்சைத்
தண்ணீர் + தேன் கலந்து, திராட்சைப் பழச்சாறு,
ஆரஞ்சு சாறு, தேங்காய்ப் பால், பேரீச்சைப்
பழச்சாறு, மாதுளம் பழச் சாறு மற்றும் இதர
பழச்சாறுகளில் ஏதேனும் ஒன்றை
ஒருவேளைக்கு அருந்தி, மற்ற வேளைகளில்
மற்ற பழச்சாறு என அருந்தி இயன்ற நாட்கள்
வரை வாழலாம்.

இவ்வாறு உண்ணா நோன்பு மேற்கொள்வதன்
மூலம், உடலில் தேங்கியுள்ள சளிகள்,
கழிவுகள், நச்சுகள் உடலிலிருந்து
வெளியேறும். உண்ணா நோன்பு
முடியும்பொழுது, நன்கு பழுத்த பழ வகைகள்
சாப்பிட்டபின் தேங்காயும், பழ? வகைகளும்
உணவாக உண்டு, தூய பச்சைத் தண்ணீர்,
அல்லது இளநீர், அல்லது பழச்சாறு மட்டும்
உடலுக்குத் தேவைப்படும்போது அருந்தி
வாழ்வதன் மூலமும் மரணமில்லாப?்
பெருவாழ்வு வாழ முயலலாம்.

காபி, தேயிலை, பால், மோர், மற்றும் பிற பானங்கள்
முழுவதையும் அருந்துவதை முற்றிலும்
தவிர்த்தலும் மரணமில்லாப் பெருவாழ்வுக்கு
இன்றியமையாததாகும்.

மரணமில்லாப் பெருவாழ்வுக்கு வள்ளலார்
சுவாமிகள் கூறும் வழிமுறைகளைப் பற்றியும்
சிந்திப்போம். மனிதரது உடல் அழிய நான்கு
காரணங்கள் உள்ளன. அவை 1. உணவு, 2.
உறக்கம், 3. உழைப்பு, 4. மைதுனம் எனக்
கூறுகிறார்.

இயற்கைக்கு மாறாக சமைத்து உண்பதன்
மூலம் மனிதருக்கு நோய் ஏற்பட்டு, உடலும்
உயிரும் அழிகிறது. சமைத்துண்ணும்
பழக்கத்தினால், மனிதன் மட்டும் கும்பகர்ணன்
போன்று குறட்டைவிட்டு, ஆழ்ந்த உறக்கம்
கொள்கிறோம். இவ்வாறு உறங்குவதால், உடல்
அழிகிறது. பிற உயிரினங்களான விலங்குகள்,
பறவைகள், மற்றும் இதர உயிரினங்கள்
சமைத்து உண்பதில்லை. இயற்கையாக
உண்கின்றன; இயற்கையாக வாழ்கின்றன.
எனவே, அவையெல்லாம் தூங்காமல் தூங்கி
சுகம்பெற்று வாழ்கின்றன. நாம் மட்டும்
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்
எனப் புலம்பித் திரிகின்றோம்.

சமைத்து உண்பதால், நாம் மட்டும் இரவு, பகலாகக்
கடின உழைப்பு செய்து பணம்
சம்பாதிக்கிறோம். இவ்வாறு, கடின
உழைப்புக்குப் பின்னர் நமது உடலும் உயிரும்
அழிகிறது. சமைத்து உண்பதால், நாம் மட்டும்
மிகுதியான மைதுனம் (உடலுறவு)
கொள்கிறோம். அதனாலும்கூட நமது உடலும்
உயிரும் அழிகிறது.

மேலும் தமிழ்நாட்டில் வாழ்ந்த மகாகவி
பாரதியாரும்,
தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!
என, வெந்த உணவாகிய சோறு? தினம் தின்று,
கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் –
இறக்கும் பல வேடிக்கை மனிதர் என நெருப்பில்
வெந்த உணவைத் தின்பதால் மனிதருக்கு
மரணம் ஏற்படுகின்றது எனத் தீர்க்க
தரிசனமாகக் கூறியுள்ளார்.

மனிதன்மரணமில்லாதவன்; மனிதனது மரணத்துக்குக்

காரணம், 1. உள் விபத்து; 2. வெளி விபத்து.
இவ்விரு விபத்துகளும் இல்லையென்றால்,
மனிதனுக்குச் சிறிது கூட மரணமேற்பட
வாய்ப்பில்லை’ எனத் தெளிவாகக்
கூறியுள்ளார்.

அவர் செய்த உயிரியல் ஆய்வின் விவரம் -
ஒரு கோழிக்குஞ்சின் இதயத்தின் சதைத்
துண்டை அறுத்தெடுத்து, அதை ஒரு
சோதனைக் குழாயில் போட்டார்.
அச்சதையிலுள்ள செல்கள?் உயிருடன் இயங்க,
ஒரு நுண்ணூட்டத் திரவத்தை அச்சோதனைக்
குழாய்க்குள் ஊற்றினார். அச்சதையின்
செல்களின் கழிவுகள் வெளியேறும் வண்ணம்
அதற்குரிய ஒரு திரவத்தையும் அச்சோதனைக்
குழாய்க்குள் ஊற்றினார். எனவே,
கோழிக்குஞ்சின் இதயத் தசையில் உள்ள
செல்கள் உயிருடன் இயங்கவும்,
செல்களிலிருந்து கழிவுகள் வெளியேறவும்
உரிய திரவங்களை ஊற்றி, ஒரு நுண்பெருக்குக்
கண்ணாடி மூலம், அச்செல்களின் இயக்கத்தைக்
கவனித்தார். தொடக்கத்தில், அச்செல்களின்
இயக்கம் எவ்வாறு இருந்ததோ, பல ஆண்டுகள்
ஆகியும் அந்தச் செல்களின் இயக்கம்,
சிறிதுகூட குன்றவில்லை. மாறாக எத்தனை
ஆண்டுகள் ஆனாலும் தொடக்கத்தில் இருந்த
இயக்கமே இருந்தது.

இதிலிருந்து அவர் ஒன்றைச் சிந்தித்தார். ஒரு
கோழிக்குஞ்சின் செல்லுக்கே, உரிய
நுண்ணூட்டமும், கழிவுகள் வெளியேறவும்
வாய்ப்புக் கொடுத்தால், திறமையுடன்
குன்றாது செல் இயங்கினால், மனிதரது செல்,
கோழிக்குஞ்சின் செல்லைவிட மிகவும்
அளப்பரியது. திறமை வாய்ந்தது.
பேராற்றலுடையது. மிகவும் வலுவானது.

எனவே, மனிதரது செல்களும் திறமையாக
இயங்கத் தகுந்த நுன்ணூட்டமும், கழிவுகள்
வெளியேறுவதற்கும் உரிய தக்க
வாய்ப்பளித்தால், மனிதரது செல்லும்
சிதையாது. வளர்ச்சி குன்றாது, இறக்காது.
மனிதரது செல்கள் இறக்காமல் இருந்தால்,
மனிதருக்கும் மரணமில்லை

மாறாக மரணம் வந்தால், உயிருக்கு
ஒவ்வாத உணவுகளை உண்டு உள் விபத்து
ஏற்பட்டு மரணம் வரலாம். அல்லது வெளி
விபத்து ஏற்பட்டு மரணம் வரலாம்.
இல்லையேல் மனிதனுக்கு மரணமே இல்லை.
மரணமில்லாப் பெருவாழ்வு உள்ளது எனக்
கூறியுள்ளார்.

‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ - இது
குறள் கூறும் கருத்து.

அசபை யோகம்

அசபை யோகம்

அசபை அல்லது அஜபா யோகம் என்றும் கூறுவர். இவ்யோகத்தினை பயில விரும்புவோர் இயமம் நியமம் கடைபிடித்து ஆரம்பிக்கவேண்டும். சிவசிவ (ஆன்மா) மந்திரம் என்பதனை ஓம் அல்லது அம்சம் எனவும் கூறுவர். அம்சம் என்பது ஆவி(ஆன்மா)யின் மறை பொருள்.

இம் மறை பொருளான அம்சம் என்ற உயிர் இயக்கத்தை காணும் முறையை கேள்:

உயிர்ப்பு என்பது சுவாசம், சுவாசமானது உள்ளிருந்து வெளிவருங்கால் அம் என்னும் ஓசை உண்டாகும்.
சுவாசமானது  வெளியிலிருந்து உள்வருங்கால் சம் என்னும் ஓசை உண்டாகும். இதுவே சிவத்தின் மறைமந்திரம்.
இந்த மறை மந்திரமே ஊமை எழுத்து அல்லது பேசாத மந்திரம்.
வெறுமனே மூச்சை கவணித்தலை விட அதன் இயக்கத்தை உணர்ந்து அதிலே லயத்துடன் இயக்கமற்று ஏகாந்தத்துடன் இருப்பதே இறைநிலை தியானம்.
யாம் இதை இங்கு நீ உணர வேண்டும் என்பதற்காக கூறிவிட்டேன். இயம நியமத்துடன் ஒருநாளும் இடைவிடாது தொடர்ந்து ஒரு நாளைக்கு அதிகாலை, மாலை என இரண்டுகாலங்களில் ஒரு காலத்திற்க்கு 72 நிமிடம் என யோகம் பயிலுவாயின் இவ்வுலகில் சித்தனாய் வாழலாம்.

🌞🙏🌙

சரியை கிரியை யோகம் ஞானம்

இப்புவியில் பிறந்தவர்கள் இறைநிலை அடைய பலவழிகள் இருப்பினும் தனது ஊணுடம்பே ஆலயம் உள்ளம் பெருங்கோவில் சீவனே சிவன் என்றறிய நமது சித்தபெருமான்கள் உபதேசித்த நல்வழியே யோக மார்க்கம்.

இந்த யோகம்
கர்மயோகம், பக்தியோகம், மந்திரயோகம், யந்திர யோகம் , தந்திரயோகம், ஞான யோகம் என பல வழிகள் இருப்பினும் இவற்றுள் ஞானயோகமே சிறந்த மார்க்கமாகும்

இந்த ஞான யோகம் சரியை கிரியை யோகம் ஞானம் என விரிந்துள்ளது

இதில் சரியை பூரகம் என்றும் கிரியை கும்பகம் என்றும் யோகம் ரேசகம் என்றும் இதில் மனம் பிசகாமல் நின்றதுவே ஞானம் என்றும் சித்தர்கள் கூறியுள்ளனர்

கடுவெளிச் சித்தர்

பல்லவி பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் பாபஞ்செய் யாதிரு மனமே. சரணங்கள் சாபம் கொடுத்திட லாமோ ? -...